Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

IPhone உரிய சிறந்த 7 மென்பொருட்கள்

Written By Unknown on வெள்ளி, 23 டிசம்பர், 2011 | PM 10:53

தற்போது நம் அனைவருடைய கனவு கையடக்கத்தொலைபேசி என்றால் iphone  தான் இந்த வகையில் நம்மிடையே iphone கைகளில் கிடைத்தும் உள்ளது அப்படிப்பட்ட iphone க்கான சிறந்த மென்பொருட்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

1.Card அப்ப்ளிகாடின்
அபில் நிறுவனம் தற்போது வெளிவிட்ட இந்த மென்பொருளானது உங்களுடைய ஆக்க திறனுக்கும் கற்பனை சக்திக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது இதன் ஊடாக நீங்கள் விரும்பியவாறு வாழ்த்து அட்டைகள் மற்றும் சில அட்டைகளை வடிவமைத்து அனுப்பிக்கொள்ளலாம்.




2. I movie Application
இந்த மென்பொருள் ஊடாக நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம்.


3.Garage Band
இந்த மென்பொருள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய இசைவடிவங்களை உருவாக்கி கேட்டுமகிழ வாய்ப்பை எற்படுத்துகின்றது.

4. ibook
புத்தப் பிரியர்களுக்கானவடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் இது நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி மற்றும் download செய்து சேமித்து உங்களுடைய தேவைக்கு எற்ற வகையில் பயன்படுத்தலாம்.


5.Keynote
இதன் ஊடாக உங்களுடைய முக்கியமான தரவுகள் மற்றும் படங்களை பரிமாற்றிக்கொள்ளமுடியும். Presentation, Documents, Photos


6.Pages

7. Numbers
உங்களுடைய தரவுகளை தகவல்களாக மாற்றக் கூடிய ஒரு மென்பொருள். இதன் ஊடாக உங்களுக்கு பொருத்தமான வரைபுகள் படங்கள் மற்றும் பலவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்

PM 10:53 | 0 comments

HTC bluetooth Speaker

Written By Unknown on வியாழன், 15 டிசம்பர், 2011 | AM 5:48

HTC releases BS P100 Portable Bluetooth Conference Speakerபுதுமை செய்வது என்றால் இன்று அனைவருக்கும் விருப்பமான செயற்பாடு ஆகும். இந்த முறையை தற்போது HTC நிறுவனம் சிறந்த புதுமைகளை படைத்துள்ளது தற்போது  எச்டிசி ஸ்மார்ட்போன்களுக்கான் அக்சஸரிகளைத் தயாரிப்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக தற்போது எச்டிசி புதிய கான்பரன்ஸ் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஒரு ப்ளூடூத் வசதி கொண்ட போர்ட்டபுள் ஸ்பீக்கர் ஆகும். இதன் பெயர் HTC BS P 100.

இதை மிகவும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த HTC BS P 100 ப்ளூடூத் ஸ்பீக்கர் மிகவும் பக்காவான ஸ்டைலில் உள்ளது. இது உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரே நேரத்தில் 2 ப்ளூடூத் டிவைஸ்களுடன் இணைக்க முடியும். 

இந்த எச்டிசி ப்ளூடூத் ஸ்பீக்கரின் சிறப்புகளைப் பார்த்தால் அது முதலில் உறுதியான உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவமாக பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இது 200 – 300 மணி நேர ஸ்டான்ட் பை நேரத்தை கொண்டுள்ளது. அ இது 8 மணி நேர பேக்கப்பை கொடுக்கும். இதன் கான்பரன்ஸ் உரையாடல் நேரம் 10 மணி நேரம் ஆகும். இதன் ட்ரூ வயர்லஸ் ஸ்டீரியோ இயங்கு நேரம் 6 மணி நேரம் ஆகும். இதன் சாதாரண உரையாடல் நேரம் 12 மணி நேரம் ஆகும். இந்த எச்டிசி பிஎஸ் பி100 ப்ளூடூத் கன்பரன்ஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.15,000.00/= (111.99 US $) ஆகும்.
HTC releases BS P100 Portable Bluetooth Conference Speaker
AM 5:48 | 0 comments

புதிய ஓஸ் கொண்ட பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்

Written By Unknown on ஞாயிறு, 11 டிசம்பர், 2011 | AM 5:15

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் மொபைல் சாம்ராஜ்யத்தில் ஓர் புரட்சியையே ஏற்படுத்த இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். புதிய பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொடுக்க இருக்கிறது இந்நிறுவனம்.

இதற்கு முன்பு இந்த ஓஎஸ் பிபிஎக்ஸ் ஆப்பரேட்டிங் என்ற பெயர் கொண்டதாக வெளிவர இருந்தது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய விஷேசமே இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு அப்ளிகேஷன்கள் தயாரித்து வழங்குவோர் பிளாக்பெர்ரி நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதுதான். 

இந்த நிலையில், அதிக ஆவலைத் தூண்டியுள்ள இந்த புதிய பிளாக்பெர்ரி 10 ஓஎஸ்ஸுடன் அடுத்த ஆண்டு பிளாக்பெர்ரி மிலன் என்ற புதிய ஸ்மார்ட்மொபைலை பிளாக்பெர்ரி அறிமுகம் செய்ய உள்ளது.

ஆனால், மிலன் ஸ்மார்ட்போனுக்கு முன்னால் பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பிளாக்பெர்ரி லண்டன் என்ற புதிய ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட ஸ்லைடர் ஸ்மார்ட்மொபைல். இதன் திரை நிச்சயம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும். பிளாக்பெர்ரி மிலன் ஸ்மார்ட்மொபைலில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் அழகான புகைப்படத்தையும், வீடியோவினையும் பெற முடியும். மற்றொரு இனிப்பான செய்தியும் பிளாக்பெர்ரி நிறுவனத்திடமிருந்து வரும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் 5 புதிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து, வெளியிட பிளாக்பெர்ரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், பிளாக்பெர்ரி மிலன் ஸ்மார்ட்மொபைல் பற்றிய விலை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
AM 5:15 | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்