Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

கூகுள் குரோமின் புதிய பதிப்பு

Written By Unknown on ஞாயிறு, 26 மே, 2013 | PM 6:04

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Chrome 27 எனும் பெயருடன் Windows, Mac மற்றும் Linux இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளுக்காக அறிமுகமாகியிருக்கும் இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட சில வழுக்கள் நிவர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன் இணையப்பக்கங்களை 5 சதவீதம் வேகமாக தரவிறக்கம் செய்து காண்பிக்கும் தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தவிர chrome.syncFileSystem API எனும் வசதியும் புதிதாக தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


தரவிறக்கச்சுட்டி
PM 6:04 | 0 comments

ஆப்பிள்-1 கணனி 668,000$ ஏலம்

ஆப்பிள்-1 கணனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் கடந்த 1976ம் ஆண்டில் முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கணனியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அப்போது, இக்கணனி ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ போர்டுடன் கூடிய இந்த கணனி உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டது.

இந்நிலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட அப்பிள்-1 கணனி ஜேர்மனியில் உள்ள பிரகர் இல்லத்தில் ஏலம் விடப்பட்டது.

அந்த கணனியுடன், ஜாம்பவான்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீல் வோஷ்னியாக் ஆகியோர் கையெழுத்துடன் கூடிய கடிதமும் ஏலத்தில் விடப்பட்டது.

அவை 668,000$ ஏலம் போனது. ஆனால், அதை ஏலம் எடுத்தவர் பெயர் வெளியிடப்படவில்லை.
PM 6:00 | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்