Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

ஆப்பிள்-1 கணனி 668,000$ ஏலம்

Written By Unknown on ஞாயிறு, 26 மே, 2013 | PM 6:00

ஆப்பிள்-1 கணனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் கடந்த 1976ம் ஆண்டில் முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கணனியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

அப்போது, இக்கணனி ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மரத்தினால் ஆன கீ போர்டுடன் கூடிய இந்த கணனி உலகம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டது.

இந்நிலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட அப்பிள்-1 கணனி ஜேர்மனியில் உள்ள பிரகர் இல்லத்தில் ஏலம் விடப்பட்டது.

அந்த கணனியுடன், ஜாம்பவான்கள் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீல் வோஷ்னியாக் ஆகியோர் கையெழுத்துடன் கூடிய கடிதமும் ஏலத்தில் விடப்பட்டது.

அவை 668,000$ ஏலம் போனது. ஆனால், அதை ஏலம் எடுத்தவர் பெயர் வெளியிடப்படவில்லை.

0 comments:

கருத்துரையிடுக