Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?
மென்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மென்பொருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அழிந்த கோப்புக்களை மீட்க உதவும் மென்பொருள்

Written By Unknown on ஞாயிறு, 28 ஏப்ரல், 2013 | 4:34 AM

கணனிச் சேமிப்புச் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தரவுகள் எதிர்பாராத விதமாக அழிந்துவிடுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இவ்வாறு தரவுகளை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளைகளில் கைகொடுப்பதற்கு பல்வேறு Date Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன.

இருந்த போதிலும் தரவுகளை மீட்பது மட்டுமன்றி சேமிப்பு சாதனங்களில் ஏற்படக்கூடிய பல்வேறு வழுக்களை (உதாரணமாக Disk Corrupt) நீக்கி அதனை சிறந்த முறையில் இயங்கச் செய்வதற்கு DiskPatch எனும் மென்பொருள் கைகொடுக்கின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளானது பின்வரும் வழுக்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.

1. Corrupt MBR (Master Boot Record)

2. Corrupt Partition Tables

3. Accidentally Deleted Partitions

4. Corrupt Boot Sectors

5. Bad Sectors

4:34 AM | 0 comments

தேவையற்ற இரைச்சல்களை நீங்க மென்பொருள்

Written By Unknown on சனி, 27 ஏப்ரல், 2013 | 4:02 AM

ஒலிப் பதிவு ஒன்றின்போது ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களை அதிலிருந்து நீக்குவதற்கு Vocal Remover எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனானது ஸ்டீரியோ சேனல்களின் 180 டிகிரியில் உருவாக்கப்படும் இரைச்சல்களை துல்லியமாக நீக்கக்கூடியதாகவும், இரண்டு சேனல்களினதும் தரத்தை அதிகரிக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷனை தனியாக இயக்க முடியாது காணப்படுவதுடன் Winamp மற்றும் DirectX போன்ற மென்பொருட்களுடன் இணைத்தே பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


தரவிறக்கச்சுட்டி
4:02 AM | 0 comments

Angry Birds இலவசமாக தரவிறக்க

Written By Unknown on செவ்வாய், 26 ஜூன், 2012 | 6:49 PM

Angry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. பல மில்லியன் தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படித்தவை இவ்வகை விளையாட்டுக்கள். என்னதான் பற்பல வீடியோ கேம்கள் பல GBகளில் வந்தாலும் வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறத. இந்த விளையாட்டு. 

இதன் ஒரு பதிப்பான Session இன் புதிய பகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதை நீங்களும் இங்கே தரவிறக்கி விளையாடுங்கள்.இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் விளையாட ஆசை இலவசமாக இல்லை?


  • இதற்கு முதல் மார்ச் மாதம் Angry Birds Space பகுதி வெளியிடப்பட்டது. 
  • Angry Bird விளையாட்டின் அடுத்த தொகுப்பானAngry Birds Heikki வெளியிடப்பட்டது


இதை சில சமயம் நீங்கள் விளையாடி இருக்க மாட்டீர்கள். இதன் முதல் பதிப்பு 2 வருடங்களுக்கு முதல் வந்தது. அண்மையில் ஜப்பான்  நாட்டின் ஒரு விழாவை முன்னிட்டு தனது புதிய பதிப்பை வெளியிட்டது.அதுவே இது.

எவ்வாறு நிறுவுவது:
1.) தரவிரக்கிய பின்னர் இணைய இணைப்பை துண்டியுங்கள்.
2.) தரவிரக்கிய .exe Fileளை நிறுவுங்கள்.
3.) பின்பு தரவிரக்கப்பட்ட Patch fileகளை பொருத்துங்கள் .

  
 எவ்வாறு Patch செய்வது:-
  1. முதலில் trialஆக நிறுவுங்கள்.
  2. பின் Patch Folder இல் உள்ள fileகளை கேம் நிறுவப்பட்ட folderஇல் Paste  செய்யுங்கள்.
  3. இப்போது அந்த patch fileலை இயக்குங்கள்.
  4. அதில் "Patch" என்பதை கிளிக் செய்யுங்கள்.
  5. முடிந்துவிட்டது., இனி சீரியல் கொடுக்க வேண்டியதுதான்.
  6. இப்போது டெஸ்க்டாப் இல் உள்ள angry Birds Iconஐ கிளிக் செய்து விளையாட்டை இயக்கி முகப்பில் உள்ள "Click To Active"ஐ தெரிவு செய்யுங்கள். 
  7. அதன் பின்பு தரவிரக்கப்பட்ட போல்டரில் உள்ள சீரியல் இலக்கத்தை பிரதிஎடுத்துபேஸ்ட் செய்யுங்கள் 
  8. இப்போது விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள்..
பதிவிறக்க இங்கே கிளிக் செய்க.
6:49 PM | 0 comments

உங்களுடைய pdf கோப்பை இணைக்க பிரிக்க

Written By Unknown on வெள்ளி, 20 ஏப்ரல், 2012 | 9:49 PM

பி.டி.எப் கோப்புகளை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப் கோப்புடன் மற்றொன்றை இணைக்கவோ அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை. கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. 

இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.டி.எப் கோப்புகளை கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பல பி.டி.எப் கோப்புகளை ஒரே கோப்பாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. 

இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் 

1. அனைத்து கோப்புகளின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.  2. ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திட வேண்டும். 
3. எந்த வரிசையில் இணைக்க வேண்டும்.
4. இறுதியாக merge பட்டனை அழுத்தியவுடனேயே அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கோப்பாக மாற்றப்படும்.

இந்த கோப்பை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய கோப்புகள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப்பட்டும் கோப்புகளை உங்கள் கணணியில் வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்த வசதி, பி.டி.எப் கோப்பு ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப் கோப்பை தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்திடுங்கள். இதற்கு முன் எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள். பதிவேற்றம் செய்து பிரிப்பதற்கான(split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப்படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும். 

உங்களுக்கு ஒரு பி.டி.எப் கோப்பு கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது கடவுச்சொல் கேட்கிறது. என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப் கோப்பின் கடவுச்சொற்கை நீங்க இந்த தளம் முயற்சிக்கும். அப்படியும் முடியாத பட்சத்தில் விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப் கோப்பை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால் கடவுச்சொல் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது. இதே போல கடவுச்சொல் இல்லாத உங்கள் கோப்புக்கு கடவுச்சொல் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.

இணையத்தள முகவரி
9:49 PM | 0 comments

உங்களுடைய VLC Playerல் ஓடியோ கன்வெர்ட்

நாம் பொதுவாக ஓடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வதற்கு சில மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவோம். ஆனால் இதனை VLC Media Player லிலேயே மேற்கொள்ளலாம். VLC Media Player-யை ஓபன் செய்து கொண்டு அதில் Mediaவில் Convert->Save என்பதை கிளிக் செய்யவும். அதில் File என்ற டேப்பில் உங்கள் Audio/Video File ஐ open செய்து Audio/Video வை தெரிவு செய்து Convert/Save என்பதனை Click செய்யுங்கள். அதன் பின் Stream output என்ற விண்டோ ஓபனாகும், அதில் Encapsulation டேப்ஐ Click செய்து உங்களுக்கு தேவையான போர்மட்டை தெரிவு செய்து Save என்பதை Click செய்யுங்கள். அவ்வளவு தான் உங்களது ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகள் நீங்கள் தெரிவு செய்த போர்மட்டுக்கு மாறிவிடும்.
9:39 PM | 0 comments

அழகிய Logo உருவாக்க

Written By Unknown on திங்கள், 26 மார்ச், 2012 | 2:01 AM

ஒரு நல்ல சின்னம் (logo) அது பார்வையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுத்தர உதவும் ஓர் அரிய குறியீடாகும். இதனை உங்களுடைய தேடு பொறி, சமூக வலைத்தளங்கள் / சமூக வலைப்பின்னல் தளங்களில் மூலம் உங்கள் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள உதவும். இருந்து கவனத்தை பெறும் முதல் விஷயம் ஒரு எந்த ஆன்லைன் பிராண்ட் / தளம் / வலைப்பதிவிற்கு வேண்டும் உள்ளது. நீங்கள் ஃபோட்டோஷாப் அல்லது கிராபிக்ஸ் வடிவமைப்பை பற்றி ஒன்றும் தெரியாது போது ஒரு வலைத்தளத்தை ஒரு முத்திரை அல்லது பதாகையின் உருவாக்குதல் எப்போதும் ஒரு கடினமான வேலை தான். நீ ஒரு தொழில்முறை வடிவமைப்பாளர் வடிவமைக்கப்பட்டது பெறுவதில் நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் இணைய தளத்தில் ஒரு சின்னத்தை உருவாக்க ஒரு மிகப்பெரிய தொகையை செலுத்த வேண்டும். நீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால் இப்போது, நீங்கள் சின்னங்கள் மற்றும் பதாகைகளை உருவாக்க வழங்கும் இந்த சில இலவச ஆன்லைன் தளங்கள் முயற்சி. சில நொடிகள் மற்றும் ஒரு சிறிய முயற்சி உள்ள, வலை வடிவமைப்பு எந்த அறிவும் இல்லாது உங்கள் தளத்தில் ஒரு அழகான முத்திரை அல்லது பதாகையின் வடிவமைக்க முடியும். எனவே இங்கே ஆன்லைன் லோகோ மற்றும் பதாகைகளை வடிவமைக்க முதல் 10 தளங்களின் தொகுப்பு ஆகும். 


01. Avatargenerator



02. AdDesigner




03. AnimationOnline


04. Cool Text



05. Cool Text



05. CoolArchieve



06. Crecon


FreeFlashLogos



Glitterize



Make You Own Sign Generator



TopSiteGuide Banner


2:01 AM | 0 comments

பொறியியல் துறையினருக்கு சிறந்த மென்பொருள் - Mathematica

Written By Unknown on வெள்ளி, 17 பிப்ரவரி, 2012 | 9:46 PM


கணனி மென்பொருட்களுடைய பயன்பாடு நம்முடன் வளர்ச்சியடைந்தே வருகின்றது. தற்போது எந்த தேவையையும் கணனி மென்பொருட்கள் ஊடாக நிவர்த்தி செய்யக்கூடிய வகையின் மென்பொருட்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த கனித மென்பொருளே Mathematica. இந்த மென்பொருளின் ஊடாக விஞ்ஞான மற்றும் கணித, பொறியியல் செயற்பாடு மற்றும் கணனி செயற்பாடுகளை இலகுவாக செய்யலாம்.

இந்த மென்பொருளை வடிவமைத்தவர் Stephen Wolfram இவர் 29.08.1959ம் ஆண்டு பிறந்த பிரித்தானிய விஞ்ஞானியாவர். இந்த Mathematica என்ற பெயரை சிபார்சு செய்தவர் Apple நிறுவனர் Steve Jobs.

இந்த மென்பொருள் ஊடாக கணித செய்முறைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்.

வரைபடங்களை 2D, 3D பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் பல வசதிகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

Mathematica 8.0.4 வரை வெளியிடப்பட்டுள்ளன.

மென்பொருளை இலவசமாக பதிவிறக்க

9:46 PM | 0 comments

IPhone உரிய சிறந்த 7 மென்பொருட்கள்

Written By Unknown on வெள்ளி, 23 டிசம்பர், 2011 | 10:53 PM

தற்போது நம் அனைவருடைய கனவு கையடக்கத்தொலைபேசி என்றால் iphone  தான் இந்த வகையில் நம்மிடையே iphone கைகளில் கிடைத்தும் உள்ளது அப்படிப்பட்ட iphone க்கான சிறந்த மென்பொருட்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

1.Card அப்ப்ளிகாடின்
அபில் நிறுவனம் தற்போது வெளிவிட்ட இந்த மென்பொருளானது உங்களுடைய ஆக்க திறனுக்கும் கற்பனை சக்திக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது இதன் ஊடாக நீங்கள் விரும்பியவாறு வாழ்த்து அட்டைகள் மற்றும் சில அட்டைகளை வடிவமைத்து அனுப்பிக்கொள்ளலாம்.




2. I movie Application
இந்த மென்பொருள் ஊடாக நீங்கள் விரும்பியவாறு உங்களுடைய வீடியோக்களை மாற்றிக்கொள்ளலாம்.


3.Garage Band
இந்த மென்பொருள் உங்களுக்கு நீங்கள் விரும்பிய இசைவடிவங்களை உருவாக்கி கேட்டுமகிழ வாய்ப்பை எற்படுத்துகின்றது.

4. ibook
புத்தப் பிரியர்களுக்கானவடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் இது நீங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி மற்றும் download செய்து சேமித்து உங்களுடைய தேவைக்கு எற்ற வகையில் பயன்படுத்தலாம்.


5.Keynote
இதன் ஊடாக உங்களுடைய முக்கியமான தரவுகள் மற்றும் படங்களை பரிமாற்றிக்கொள்ளமுடியும். Presentation, Documents, Photos


6.Pages

7. Numbers
உங்களுடைய தரவுகளை தகவல்களாக மாற்றக் கூடிய ஒரு மென்பொருள். இதன் ஊடாக உங்களுக்கு பொருத்தமான வரைபுகள் படங்கள் மற்றும் பலவற்றை உருவாக்கிக்கொள்ளலாம்

10:53 PM | 0 comments

கோபக்கார பறவைகள் (ANGRY BIRDS) உங்கள் கையடக்க தொலைபேசிக்கு

Written By Unknown on வெள்ளி, 24 ஜூன், 2011 | 10:41 PM

iPhone Screenshot 1
 உங்களுக்குப்பிடித்த கோபக்கார பறவைகள் (ANGRY BIRDS) தற்போது உங்களுடைய கையடக்க தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம். உலக ரீதியாக பலரது வரவேற்றைப் பெற்ற இந்த விளையாட்டை நீங்களும் விளையாட கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்க.


http://www.opendrive.com/files/28090337_8Fojq/Angry%20Birds-v1.5.1-by%20aashuzone.ipa
10:41 PM | 0 comments

காலநிலை தொடர்பான தகவல்களை அறிய மென்பொருள்

Written By Unknown on சனி, 4 ஜூன், 2011 | 7:16 AM

Click to see larger images
நமது வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என் நிகழ்கின்றன என்று கூறமுடியாது அதே போல் என் நிகழாமல் உள்ளன

என்றும் கூற முடியாது அதே போலத்தான் எமது தகவல் தொழில்நுட்பமும் சில விடயங்கள் பழக்கப்பட்டவையாகவும்
சில விடயங்கள் வியக்கக்கூடியதாகவும் காணப்படும். 

YoWindow இது மாதிரியான ஓர் மென்பொருளே. நீங்கள் விரும்பும் நாட்டினுடைய, நகரத்தினுடைய காலநிலைகள் தொடர்பான
தகவல்களை வழங்கக்கூடிய ஒரு மென்பொருளாகும். இதில் தற்போதைய காலநிலை சூரிய உதயம் மற்றும் மறைவு மற்றும் எதிர்கால
நிகழ்வுகளையும் Animation உடன் வழங்குகின்றது



பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்
7:16 AM | 0 comments

பவர்பாய்ண்ட் டிப்ஸ்

Written By Unknown on வெள்ளி, 15 ஏப்ரல், 2011 | 11:45 AM

பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில், சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். 

புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் அடுத்த வரிக்குச் செல்கையில் SHIFT + ENTER தட்ட வேண்டும். அப்படித் தட்டினால் கர்சர் புல்லட் இல்லாமல் அடுத்த வரிக்குச் செல்லும். பின் அடுத்த வரியை டைப் செய்திடலாம். டைப் செய்து முடித்தபின் மீண்டும் SHIFT + ENTER தட்டி அடுத்த வரிக்குச் செல்லலாம். ஆனால் மீண்டும் புல்லட் தேவை என்றால் அடுத்த வரிக்குச் செல்லும் முன் ஜஸ்ட் என்டர் தட்டிச் செல்லுங்கள். புல்லட் மீண்டும் வரத் தொடங்கும். 

கருப்பு திரையை நீக்க
பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் தொகுப்பின் இறுதி ஸ்லைட் முடித்து பைலை சேவ் செய்திடுகை யில் கடைசியாக கருப்பு வண்ணத்தில் திரை முழுவதுமாக ஸ்லைட் ஒன்று உருவாகும். அதில் “End of slide show click to exit” எனக் கிடைக்கும். ஒரு சிலருக்கு இந்த ஸ்லைட் தேவையில்லையே என்ற எண்ணம் ஏற்படும். பவர் பாய்ண்ட் தானாக உருவாக்கும் ஸ்லைட் இது. இதனன நீக்க கீழ்க்காணும் வழியில் செட் செய்திடவும். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “End with black slide” என்று இருக்கும் இடத்திற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருக்கும். அதனை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி இந்த கருப்பு திரை கிடைக்காது.

குறுக்கீடுகள் இல்லாத ஸ்லைட் ÷ஷா 
உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி அருமையான ஸ்லைட் ÷ஷா ஒன்றை அமைத்திருக்கிறீர்கள். இதனைப் பார்க்க வேண்டியவர்களின் முன்னால் உங்கள் சுவையான விளக்கத்துடன் காட்டிக் கொண்டிருக் கிறீர்கள். அப்போது நீங்கள் தவறுதலாக மவுஸின் ரைட் கிளிக் செய்துவிட்டால் உடன் ஒரு பாப் அப் மெனு வரும். பின் அவசர அவசரமாக எஸ்கேப் கீ அழுத்தி அதனை நீக்குகிறீர்கள். இது உங்கள் இமேஜை பார்ப்பவர்கள் முன் கெடுக்கிறதே என நினைக்கிறீர்களா? இந்த பாப் அப் மெனு வராமல் செய்திடலாம். பின் வரும் வழியை மேற்கொள்ளுங்கள். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “Slide show” என்னும் டேபைக் கிளிக் செய்தால் இன்னும் ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உள்ள பல பிரிவுகளில் “Show menu on right mouse click” என்பதனைத் தேடிக் காணவும். இதன் முன் உள்ள கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் இனி இந்த பாப் அப் மெனு தொல்லை எல்லாம் இருக்காது. மீண்டும் இது வேண்டும் என எண்ணினால் மேலே கூறியபடி சென்று அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

எழுத்துப் பிழைகளை மறைக்க
மிக அழகாக பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பு ஒன்றைத் தயார் செய்திருக்கிறீர்கள். அதனைப் பெருமை யுடனும் சிரத்தையுடனும் உங்களுடன் பணி புரிபவர்கள் அல்லது மாணவர்களுக்குப் போட்டுக் காட்ட விரும்பு கிறீர்கள். எவ்வளவு தான் முயற்சியுடன் ஸ்லைடுகளைத் தயாரித்திருந்தாலும் உங்களையும் அறியாமல் ஆங்கில சொற்களில் சில தவறுகள் இருந்தால் ஸ்லைடுகளைக் காட்டும்போது சொற்களில் சிகப்பு அடிக் கோடுகள் இருந்து உங்கள் மானத்தை வாங்கும். பிழைகளைத் திருத்தி காட்டுவதே நல்லது என்றாலும் சில வேளைகளில் நேரம் இன்மையால் அல்லது உங்களுக்கென அடுத்தவர்கள் தயாரித்துத் தருவதால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை எப்படி தவிர்க்கலாம்? இந்த எழுத்துப் பிழைகளை மறைத்திட பவர் பாய்ண்ட்டில் வசதி உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும். Tools சென்று கிளிக் செய்து வரும் மெனுவில் “Options” தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் “Spelling and Style” என்ற டேபில் கிளிக் செய்திடவும். விரியும் மெனுக்கள் அடங்கிய விண்டோவில் “Hide all spelling errors” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஸ்பெல்லிங் தவறுகள் காட்டப்பட மாட்டாது. இருந்தாலும் செல்கின்ற இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் எல்லாம் இந்த தவறுகளை மறைக்கும் வேலையை மேற்கொள்ள முடியாது. எனவே தவறுகளை முதலிலேயே திருத்திக் கொள்வது தான் நல்லது.

தொடர்ந்து இசை கிடைக்க
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ÷ஷாவின் போது மிக அருமை யாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக் கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள். இந்த சவுண்ட் பைல் நீங்கள் குறிப்பிட்ட விநாடிகள் வரை இயங்கி நின்று விடும். ஆனால் உங்கள் பிரசன்டேஷனைப் பார்ப்பவர்கள் அதிக சந்தேகங்களை எழுப்பி உங்களிட மிருந்து தகவல்களைப் பெற முயற்சிக்கையில் நீங்கள் பேசுவீர்கள். பின்னணி இசை கிடைக்காது. எனவே சவுண்ட் பைல் இயங்குவதை ஒரு லூப்பில் அதாவது நீங்களாக நிறுத்தும் வரை ஒரு வளையத்தில் இயங்கு வண்ணம் அமைக்கலாம். அதற்கு கீழ்க்கண்ட முறையில் செட் செய்திடவும்.
சவுண்ட் பைலை ஒரு ஆப்ஜெக்டாக அமைத்திருக்கையில், ஒரு ஸ்பீக்கர் ஐகான் ஒன்று ஸ்லைடில் தெரியும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Edit Sound Object” என்ற பிரிவு தெரியும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள “Loop until stopped” என்ற பிரிவில் செக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அடுத்த ஸ்லைட் செல்லும் வரை, பிரசன்டேஷன் முடியும் வரை அல்லது நீங்களாக நிறுத்தும்வரை இசை தொடர்ந்து ரம்மியமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். 

பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங்களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். 
Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும். 
Slide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப்பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும். 
Notes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத் தினை சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது. 
Slide Show:: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம். 
Black and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும். 

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் ஹெடரும் புட்டரும்
நீங்கள் தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் ஒவ்வொரு ஸ்லைடிலும் சில தகவல்களைக் காட்ட விரும்பலாம். எடுத்துக் காட்டாக குறிப்பு, சிறு தகவல், நேரம், ஸ்லைட் எண் போன்றவற்றைத் தர விரும்பலாம். இதனை எப்படி மேற்கொள்வது என இந்த டிப்ஸில் பார்க்கலாம். ஹெடர் மற்றும் புட்டர்களை எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டால் இந்த செயல் பாட்டினை மேற்கொள்வதற்கான வழிகளை அறிந்து கொள்ளலாம். 
பிரசன்டேஷனைத் திறந்து கொண்டு View மெனு செல்லவும். அங்கு “Header and Footer” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். “Header and Footer” என்ற தலைப்பில் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Slide” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் என்ற ஆப்ஷன்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது “Update automatically Date and time” என்ற ஆப்ஷனையும் மேற்கொள்ளலாம். இது “Include on slide” என்ற பிரிவில் கிடைக்க வரும். ஸ்லைடில் நம்பர் சேர்த்திட “Slide number” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். புட்டரில் சேர்த்திட "Footer''' என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பாக்ஸில் என்ன டெக்ஸ்ட் இணைத்திட வேண்டுமோ அதனை டைப் செய்திடவும். அடுத்து ஸ்லைட் டேப் செட்டிங்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட Apply என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். “Notes and Handouts” என்ற டேப்பின் கீழ் “Header” என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் “Date and time” என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் “Apply to All” என்பதில் கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி ஹெடர் புட்டர் இடங்களில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் மற்றும் எண்கள், தேதிகள் தெரியவரும். எதனையாவது மாற்ற வேண்டும் என எண்ணினால் மேலே சொன்ன வகையில் மீண்டும் செயல்பட்டு முடிக்கவும். 
11:45 AM | 0 comments

முப்பரிமாணத் தோற்றத்தில் தலங்கள் மற்றும் பல இடங்களை காணலாம்

Written By Unknown on வியாழன், 14 ஏப்ரல், 2011 | 7:34 AM

தொழில்நுட்பத்தினுடைய வளர்ச்சி நம்முடைய சிந்தனையையும் தாண்டிச் சென்றுவிடுமோ என்ற சந்தேகமும் நம்மில் பலரிடம் காணப்படுகின்றன. எனெனில் இன்றைக்கும் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னரும் இருந்த நிலையை யாரும் மதிப்பிட முடியாத அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்து விட்டது எனலாம்.

கைத்தொலைபேசி, மடிக்கணனிகள், I pod, செய்மதித் தொடர்பாடல் என எல்லாத்துறைகளிலும் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. அவ்வாறான வளர்ச்சியின் ஓர் படியே இது.

நாமில் பலர் இயற்கைக்காட்சிகள் மற்றும் அழகிய இடங்களை முப்பரிமணத்தோற்றத்திலேயே காண விரும்புவோம் ஆனால் அதற்கான சந்தர்ப்பம் கிடைப்பது குறைவு.  இந்தக்குறையை போக்க தற்போது முப்பரிமண தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.

தினமலர் பத்திரிகை இந்தியாவிலுள்ள பிரபல வழிபாட்டுத்தளங்களை முப்பரிமணத்தில் காணச்சந்தர்ப்பம் அளிக்கின்றது.

கீழ் உள்ள இணைப்பில் கிளிக் செய்வதன் ஊடாக கண்டுகளிக்கலாம். 

இவ்வாறு பல இடங்களையும் காண.


  • 7:34 AM | 0 comments

    Welcome Guys

    மொத்தப் பக்கக்காட்சிகள்

    Blogger இயக்குவது.

    பங்களிப்பாளர்கள்