புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுக்கிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,
விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பூமியைப் போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.
2025ஆம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம்..
அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்றுக்கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது' என்று கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக