பி.டி.எப் கோப்புகளை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.
ஆனால் ஒரு பி.டி.எப் கோப்புடன் மற்றொன்றை இணைக்கவோ அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை.
கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது.
இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பி.டி.எப் கோப்புகளை கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல பி.டி.எப் கோப்புகளை ஒரே கோப்பாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!.
இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும்
1. அனைத்து கோப்புகளின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும். 2. ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திட வேண்டும்.
3. எந்த வரிசையில் இணைக்க வேண்டும்.
4. இறுதியாக merge பட்டனை அழுத்தியவுடனேயே அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கோப்பாக மாற்றப்படும்.
இந்த கோப்பை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய கோப்புகள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப்பட்டும் கோப்புகளை உங்கள் கணணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த வசதி, பி.டி.எப் கோப்பு ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப் கோப்பை தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்திடுங்கள். இதற்கு முன் எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள்.
பதிவேற்றம் செய்து பிரிப்பதற்கான(split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப்படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு ஒரு பி.டி.எப் கோப்பு கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது கடவுச்சொல் கேட்கிறது.
என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப் கோப்பின் கடவுச்சொற்கை நீங்க இந்த தளம் முயற்சிக்கும்.
அப்படியும் முடியாத பட்சத்தில் விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப் கோப்பை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால் கடவுச்சொல் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது.
இதே போல கடவுச்சொல் இல்லாத உங்கள் கோப்புக்கு கடவுச்சொல் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.
இணையத்தள முகவரி
0 comments:
கருத்துரையிடுக