Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

உங்களுடைய கணனியில் Virus உள்ளதா என அறிய?

Written By Unknown on வெள்ளி, 20 ஏப்ரல், 2012 | 9:28 PM

நமது கணணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள். எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான். 

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது. இதற்கு முதலில் உங்கள் கணணியில் notepad (நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள். பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். 


X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* 
கோப்பி செய்த பின் உங்கள் notepad ல் File -> Save AS கொடுங்கள். Save செய்யும் போது .COM (பெரிய எழுத்துக்களில் - Capital letter)  என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள். பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும். 

இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்

0 comments:

கருத்துரையிடுக