Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

அழிந்த கோப்புக்களை மீட்க உதவும் மென்பொருள்

Written By Unknown on ஞாயிறு, 28 ஏப்ரல், 2013 | 4:34 AM

கணனிச் சேமிப்புச் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தரவுகள் எதிர்பாராத விதமாக அழிந்துவிடுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இவ்வாறு தரவுகளை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளைகளில் கைகொடுப்பதற்கு பல்வேறு Date Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன.

இருந்த போதிலும் தரவுகளை மீட்பது மட்டுமன்றி சேமிப்பு சாதனங்களில் ஏற்படக்கூடிய பல்வேறு வழுக்களை (உதாரணமாக Disk Corrupt) நீக்கி அதனை சிறந்த முறையில் இயங்கச் செய்வதற்கு DiskPatch எனும் மென்பொருள் கைகொடுக்கின்றது.

விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளானது பின்வரும் வழுக்களையும் நிவர்த்தி செய்யக்கூடியதாகக் காணப்படுகின்றது.

1. Corrupt MBR (Master Boot Record)

2. Corrupt Partition Tables

3. Accidentally Deleted Partitions

4. Corrupt Boot Sectors

5. Bad Sectors

4:34 AM | 0 comments

தேவையற்ற இரைச்சல்களை நீங்க மென்பொருள்

Written By Unknown on சனி, 27 ஏப்ரல், 2013 | 4:02 AM

ஒலிப் பதிவு ஒன்றின்போது ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களை அதிலிருந்து நீக்குவதற்கு Vocal Remover எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.

இந்த அப்பிளிக்கேஷனானது ஸ்டீரியோ சேனல்களின் 180 டிகிரியில் உருவாக்கப்படும் இரைச்சல்களை துல்லியமாக நீக்கக்கூடியதாகவும், இரண்டு சேனல்களினதும் தரத்தை அதிகரிக்கக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அப்பிளிக்கேஷனை தனியாக இயக்க முடியாது காணப்படுவதுடன் Winamp மற்றும் DirectX போன்ற மென்பொருட்களுடன் இணைத்தே பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


தரவிறக்கச்சுட்டி
4:02 AM | 0 comments

Samsung Galaxy core gt i8262 4.3 திரையுடன்

ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு அதிசிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது Galaxy Core என்ற டுவல் சிம் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

4.3 அங்குல அளவுடைய WVGA தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 768MB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சேமிப்புக் கொள்ளளவை microSD கார்ட்களின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, GPS வசதி, Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளதுடன் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 320 யூரோக்கள் ஆகும்.
3:55 AM | 0 comments

சம்சுன் நிறுவன ATIV Book 6 வெளியானது

Written By Unknown on வியாழன், 11 ஏப்ரல், 2013 | 6:18 PM

முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் Samsung ஆனது தனது புதிய உற்பத்தியான ATIV Book 6 இனை அறிமுகப்படுத்தியுள்ளது.

15.6 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution ஆகியவற்றினை உள்ளடக்கிய HD திரையினைக் கொண்டுள்ளதுடன் விண்டோஸ் 8 இயங்குளத்தில் செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இவற்றுடன் Quad Core Intel Core i7 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM , சேமிப்பு நினைவகமாக 1TB வன்தட்டு ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.

இவற்றின் பெறுமதியானது 1,200 அமெரிக்க டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6:18 PM | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்