Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

ஈரான் அணுசக்தி மையம் வைரஸ் தாக்கம்

Written By Unknown on வியாழன், 26 ஜூலை, 2012 | 6:31 PM

ஈரான் நாட்டின் அணுசக்தி மைய கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக, பின்லாந்து நாட்டின் "சைபர்' பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் "எஃப்- செக்யூர்' நிறுவன, ஆய்வுப் பிரிவுத் தலைவர் மிக்கோ ஹிப்பொனென் கூறியது:

கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் எங்களுக்கு வருகிறது. அந்த மின்னஞ்சல்கள், ஈரான் அணுசக்தி மையத்தில் இருந்து அனுப்பப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

அணுசக்திக் கழகத்துக்காகப் பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர், தெஹரான் அணுசக்தி திட்டம் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையா எனத் தெரியாது.

ஆனால், புறக்கணிக்கத் தக்க ஒன்றல்ல. கணினி வலையமைவுகள்(நெட்வொர்க்) வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், "மெடாஸ்ப்ளாய்ட்" என்னும் மென்பொருள், தரவுகளைத் திருடுவதற்காகப் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல்களில் கூறியுள்ளபடி, யுரேனியம் செறிவூட்டலுக்கான நடான்ஸ், ஃபோர்டோ தளங்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. பணியிடத்தில் இடையிடையே இசை ஒலிக்கிறது. நள்ளிரவு நேரங்களில் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கிறது. நேரடி மற்றும் மாற்று மின்சார மோதலால் இது நிகழ்ந்திருக்கும் என நான் கருதுகிறேன் என்று ஹிப்பொனென் தெரிவித்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் பகுதி, "ஸ்டக்ஸ்நெட்' என்னும் சக்தி வாய்ந்த "மால்வேர்' -ஆல் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகக் கூறியிருந்தன.

மேற்கத்திய நாடுகளும், இஸ்ரேலும், ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்து வரும் ஈரான், அணுசக்தித் திட்டம், அமைதியான திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும் எனக்கூறி வருகிறது.
6:31 PM | 0 comments

கூகிள் டாக் வழமைக்கு திரும்பியது

பிரபலமான மெஸேஞ்சர் சேவையான கூகிள் டாக் இன்று (26/7/2012) சில மணி நேரங்களுக்கு பாரியளவில் செயலிழந்ததாக தெரியவருகின்றது. இதனால் அதன் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

கூகிளின் ஜி டாக் என்ற மெஸெஞ்சர் சேவை இந்திய / இலங்கை நேரம் 4PM இலிருந்து நான்கு மணித்தியாலங்களுக்கு செயலிழந்ததாக தெரியவருகின்றது. இறுதியில் 8.25 PM அளவில் தான் அதன் சேவைகள் வழமைக்கு திரும்பியிருந்தன.

செயலிழப்பு நேரத்தில் அதிகமாக ஜிடாக்கை லாகின் செய்ய முடியாமல் அல்லது அரட்டையை செயற்படுத்தமுடியாமல் போனதாக அதன் பயனாளர்கள் முறையிட்டுள்ளனர்.

ஜிடாக் சேவையை நண்பர்களுடன் அரட்டைக்காக மட்டுமன்றி அலுவலங்களில் சக தொழிலாளர்களுடன் இலகுவாக இணைந்திருக்க பெருமளவில் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை டுவிட்டர் தளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. டுவிட்டரின் உத்தியோகபூர்வ வலைப்பதிவில் "Users may be experiencing issues accessing Twitter. Our engineers are currently working to resolve the issue," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6:26 PM | 0 comments

ஆன்ட்ராய்ட் மென்பொருளை உங்கள் கைத்தொலைபேசியில் இணைக்க

Written By Unknown on சனி, 7 ஜூலை, 2012 | 8:07 AM

கணனி மூலம் அன்ட்ராய்ட் மென்பொருளை உங்களுடைய கைத்தொலைபேசியில் நிறுவது எவ்வாறு என்று பார்ப்போம்.

நீங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தினால் அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை மொபைலில் நிறுவுவது பற்றி அறிந்திருப்பீர்கள். கூகுள் ப்ளே மூலம் அப்ளிகேசன்களை நிறுவுதல்: உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் எந்த கூகுள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறீர்களோ? அந்த மின்னஞ்சல் கணக்கைக் கொண்டு கூகுள் ப்ளே தளத்தில் (https://play.google.com/) உள்நுழையுங்கள்.

 உங்களுக்கு விருப்பமான அப்ளிகேசன் அல்லது கேம் பக்கத்திற்கு சென்றால் கீழே உள்ளது போல இருக்கும். உங்கள் மொபைலுக்கு அந்த அப்ளிகேசன் அல்லது கேம் ஏற்றதா? என்று சொல்லும். ஏற்றதாக இருந்தால் INSTALL பட்டனை அழுத்துங்கள். 
 பிறகு அப்ளிகேசன் விலை, கொள்ளளவு, அனுமதிகள் (Permissions) போன்ற தகவல்களை காட்டும். பார்த்த பிறகு INSTALL என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அந்த அப்ளிகேசன் விரைவில் உங்கள் மொபைலில் நிறுவப்படும் என்று சொல்லும். பிறகு OK என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்! பிறகு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு கிடைக்கும் போது அந்த அப்ளிகேசன் உங்கள் மொபைலில் தானாக நிறுவப்படும். கூகுள் நிறுவனம் ஜெல்லி பீன் என்னும் புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பை வெளியிட்ட போது Google Play தளத்தையும் மாற்றம் செய்துள்ளது. அதில் ஒன்றாக கூகுள் ப்ளே தளத்தில் இருந்து அப்ளிகேசன்கள், கேம்ஸ்களை நீக்கும் வசதியை தந்துள்ளது. இறைவன் நாடினால் அது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.
8:07 AM | 0 comments

நைட் ரைசஸ் லுமியா-800 விரைவில்

நைட் ரைசஸ் லுமியா-800 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது நோக்கியா நிறுவனம். லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்று வருகிறது. 

இதனால் இந்த வரிசையில் வெளியாகும் புதிய ஸ்மார்ட்போன்களை மக்கள் நிச்சம் அதிக ஆர்வத்தோடு எதிர்பார்ப்பார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பம் தெரிந்து லுமியா வரிசையில் புதிய ஸ்மார்ட்போனான டார்க் நைட் ரைசஸ் என்ற லுமியா-800 போனை அறிமுகம் செய்ய இருக்கிறது நோக்கியா. 

பின்லாந்தில் உள்ள தொழிற்சாலையை இழுத்து மூடுவதாக சமீபத்தில் நோக்கியா நிறுவனம் பற்றி ஒரு செய்தி வெளியானது. ஸ்மார்ட்போன் உலகில் சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சிறப்பான இடத்தினை பெற்று வருவதாகவும், நோக்கியா ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான வகையில் காலூன்ற புதிய முயற்சிகளை எடுத்து வருகிறதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் டார்க் நைட் ரைசஸ் லுமியா-800 ஸ்மார்ட்போன் நிறைய புதிய தொழில் நுட்பங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த டார்க் நைட் ரைசஸ் லுமியா-800 ஸ்மார்ட்போன் ரூ. 75,999 விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7:47 AM | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்