Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

நீங்கள் அனுப்பிய மெயில் படிக்கப்பட்டதா?

Written By Unknown on வெள்ளி, 20 ஏப்ரல், 2012 | 10:52 PM

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள். குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். 
2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். 
3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள். 
4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும். 
5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள். நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.
10:52 PM | 0 comments

சோசியல் நெட்வொர்க் மூலம் நீங்கள் இருக்கும் இடம் அறிய


பெருகிவரும் சோசியல் நெட்வொர்க்-ன் வளர்ச்சியில் ஒவ்வொரு நிறுவனமும் சலுகையை வாரி வழங்கி வருகின்றது. அந்த வகையில் இன்று புதிதாக வளர்ந்து வரும் சோசியல் நெட்வொர்க்கான Mobiluck என்பதன் மூலம் இருக்கும் இடத்துடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் வசதி வந்துள்ளது.

நண்பர்களுடன் டீக்கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கும் போது, நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நண்பர்களை அழைக்க வேண்டாம் அவர்களும் இந்த சோசியல் நெட்வொர்க்-ல் பயனாளராக இருந்தால் அவருக்கு உங்க நண்பர் கந்தசாமி இந்த டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார், டீக்கடை 1 கி.மீ தொலைவில் இருக்கிறது என்ற செய்தியை பகிர்ந்துகொள்ள உதவுகிறது இந்த சோசியல் நெட்வொர்க்.

நம்முடன் இந்த சோசியல் நெட்வொர்க்-ல் உள்ள நண்பர்கள் ஒவ்வொருவரும் தற்போது எங்கே இருக்கின்றனர் என்ற தகவலை இலவசமாகவே கொடுக்கிறது. இந்ததளத்திற்கு சென்று இலவசமாக நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும். மொபைல்-க்கு என்று சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த சோசியல் நெட்வொர்க்-ல் 200 வகையான மொபைல் மாடல்களுக்கு துணை செய்கிறது.
ஜீடாக் முதல் யாகூ, ஸ்கைப், MSN போன்ற அனைத்து சாட் ரூம் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.


10:48 PM | 0 comments

தடை செய்யப்பட்ட முகவரிகளை பார்க்க

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை எளிதாக பார்க்கலாம். இதற்கு ஒரு தளம் உதவி புரிகிறது. ஆனால் தடை செய்யப்பட்ட அனைத்து தளங்களையும் பார்க்க முடியாது. 

அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது. டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது, அதன் வரம்பு கருதி இணையத்தள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா? டிவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும். இதனால் இணைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம். இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையத்தளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.

10:35 PM | 0 comments

எப்படி வேகமாக செய்வது?

எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள். அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செயலை மிகவும் விரைவில் முடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. 
தி பாஸ்டஸ்ட் வே சைட் என்னும் அந்த தளம் ஒவ்வொரு செய‌ல்களையும் விரைவாக செய்வது எப்படி என வழி காட்டுகிறது. 

வழிமுறைகளோடு வீடியோ விளக்கமும் இடம்பெறுகிறது. இரண்டே நிமிடங்களில் டி ஷர்ட்டை மடிப்பது எப்படி என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எல்லாமே பயனுள்ளவை என்று சொல்ல முடியாவிட்டாலும் சுவாரஸ்யமான தளம். ஏதாவ‌து செயல்க‌ளை விரைந்து முடிக்க‌ வ‌ழி தேவை என்றாலும் இந்த‌ த‌ள‌த்தில் ச‌ந்தேக‌ம் கேட்க‌லாம்.

-http://www.thefastestwaysite.com
9:56 PM | 0 comments

உங்களுடைய pdf கோப்பை இணைக்க பிரிக்க

பி.டி.எப் கோப்புகளை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப் கோப்புடன் மற்றொன்றை இணைக்கவோ அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை. கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. 

இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.டி.எப் கோப்புகளை கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பல பி.டி.எப் கோப்புகளை ஒரே கோப்பாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. 

இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் 

1. அனைத்து கோப்புகளின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.  2. ஒவ்வொன்றாக இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திட வேண்டும். 
3. எந்த வரிசையில் இணைக்க வேண்டும்.
4. இறுதியாக merge பட்டனை அழுத்தியவுடனேயே அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கோப்பாக மாற்றப்படும்.

இந்த கோப்பை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய கோப்புகள் அந்த தளத்தில் இருக்காது. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப்பட்டும் கோப்புகளை உங்கள் கணணியில் வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்த வசதி, பி.டி.எப் கோப்பு ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப் கோப்பை தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்திடுங்கள். இதற்கு முன் எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள். பதிவேற்றம் செய்து பிரிப்பதற்கான(split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டயலாக் பாக்ஸில், பிரிக்கப்பட வேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப்படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும். 

உங்களுக்கு ஒரு பி.டி.எப் கோப்பு கிடைத்துள்ளது. அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகிறீர்கள். ஆனால் அது கடவுச்சொல் கேட்கிறது. என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு பதிவேற்றம் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப் கோப்பின் கடவுச்சொற்கை நீங்க இந்த தளம் முயற்சிக்கும். அப்படியும் முடியாத பட்சத்தில் விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப் கோப்பை எந்த தரப்படி என்கிரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால் கடவுச்சொல் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்துள்ளது. இதே போல கடவுச்சொல் இல்லாத உங்கள் கோப்புக்கு கடவுச்சொல் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.

இணையத்தள முகவரி
9:49 PM | 0 comments

உங்களுடைய VLC Playerல் ஓடியோ கன்வெர்ட்

நாம் பொதுவாக ஓடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வதற்கு சில மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவோம். ஆனால் இதனை VLC Media Player லிலேயே மேற்கொள்ளலாம். VLC Media Player-யை ஓபன் செய்து கொண்டு அதில் Mediaவில் Convert->Save என்பதை கிளிக் செய்யவும். அதில் File என்ற டேப்பில் உங்கள் Audio/Video File ஐ open செய்து Audio/Video வை தெரிவு செய்து Convert/Save என்பதனை Click செய்யுங்கள். அதன் பின் Stream output என்ற விண்டோ ஓபனாகும், அதில் Encapsulation டேப்ஐ Click செய்து உங்களுக்கு தேவையான போர்மட்டை தெரிவு செய்து Save என்பதை Click செய்யுங்கள். அவ்வளவு தான் உங்களது ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகள் நீங்கள் தெரிவு செய்த போர்மட்டுக்கு மாறிவிடும்.
9:39 PM | 0 comments

உங்களுடைய கணனியில் Virus உள்ளதா என அறிய?

நமது கணணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள். எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான். 

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது. இதற்கு முதலில் உங்கள் கணணியில் notepad (நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள். பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். 


X5O!P%@AP[4PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* 
கோப்பி செய்த பின் உங்கள் notepad ல் File -> Save AS கொடுங்கள். Save செய்யும் போது .COM (பெரிய எழுத்துக்களில் - Capital letter)  என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள். பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும். 

இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்
9:28 PM | 0 comments

உங்களுடைய Bookmark எப்படி Backup செய்வது

நம் எல்லோருக்கும் firefox- இன் BookMark சேவ் செய்ய தெரியும். (ctrl உடன் B அழுத்தினால்) ஆனால் எப்படி அந்த Bookmark செய்த தகவல்களைப் மீண்டும் பெறுவது என்பது தான் சிக்கல்.

இதை அறிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம் நாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய வேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை இழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1.In firefox, Bookmarks->Select Organize BookMarks..

                                      

 2.Click Import and Backup and Select Backup


3.Type your Desired name and Save

 4.Now we backup the bookmarks Successfully.

தற்போது உங்களுடைய தரவுகள் பெறப்பட்டுள்ளன. இனி நீங்கள் உங்களுடைய தகவல்களை பயன்படுத்த ஒரு படி செய்யவேண்டும் வாங்க பார்ப்போம்.

Import சென்று
 5.Select your BookMark backup and open....thats it all your bookmarks will be restored.
.

9:03 AM | 0 comments

Welcome Guys

மொத்தப் பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.

பங்களிப்பாளர்கள்