Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

Virus Total வாங்குகின்றது கூகிள்

Written By Unknown on சனி, 8 செப்டம்பர், 2012 | 8:08 PM

கூகிள் நிறுவனம் மற்றும் ஒரு சாதனையை செய்வதற்கான முயற்சியல் இறங்கியுள்ளது எனலாம். என் என்றா கேட்கின்றீர்கள் தற்போது கூகிள் நிறுவனம் Virus Total என்கின்ற இணையத்தள Anti Virus கம்பனியை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

Virus Total பற்றி முதலில் பார்ப்போமாயின் இந்த இணையத்தளத்தில் உங்களுடைய கோப்புக்களை, கணனியை அல்லது இணையப் பக்கத்தைக் கூட Virus உள்ளதான என பரிசோதித்துக்கொள்ளலாம். இன்னுமோர் சிறப்பு என்ன என்றால் உங்களுடைய இணைய உலாவிகளிலும் நிறுவிக்கொள்ளலாம்.

இந்த வியாபாரப் பேச்சு வார்த்தை தொடர்பாக Virus Total கூறும் போது, இவ்வாறான வியாபாரப் பேச்சு வார்த்தைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் கூகிள் நிறுவனம் எதிர்காலத்தில் தங்களுடைய சேவைகளை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டிய உதவிகளை செய்யவுள்ளதாகவும் கூறிப்பிட்டுள்ளது.

இதுவரை பல தொழில்நுட்ப கம்பனிகளை கூகிள் நிறுவனம் வாங்கியுள்ளது ஆனால் அவற்றால் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்று கூறுவது கடினம் ஆனால் Total Virus கம்பனியினுடைய கொள்வனவு எவ்வாறான மாற்றங்களை உருவாக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Yahoo, Bing நிறுவனங்கள் தங்களுக்கு என்று ஒவ்வொரு Anti Virus மென்பொருட்களை கொண்டுள்ளன ஆனால் தற்போது தான் கூகிள் நிறுவனம் இந்த சேவையை தொடங்குகின்றது.

இந்த கொள்வனவின் மூலம் கூகிள் நிறுவனம் மாற்றைய போட்டி Anti Virus சேவையை வழங்கும் நிறுவனங்களுடன் ஓர் பங்குடமை வியாபாரத்தில் ஈடுபடலாம் அத்துடன் கூகிள் தன்னுடைய குறோம் உலாவி மூலம் Virus உள்ள தளங்களை கண்டுபிடித்து தகவல்களை வழங்குகின்றது, பாதுகாப்பான மின்னஞ்சல் சேவையையும் உறுதிப்படுத்துகின்றது.

0 comments:

கருத்துரையிடுக