Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

கூகிள் டாக் வழமைக்கு திரும்பியது

Written By Unknown on வியாழன், 26 ஜூலை, 2012 | 6:26 PM

பிரபலமான மெஸேஞ்சர் சேவையான கூகிள் டாக் இன்று (26/7/2012) சில மணி நேரங்களுக்கு பாரியளவில் செயலிழந்ததாக தெரியவருகின்றது. இதனால் அதன் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

கூகிளின் ஜி டாக் என்ற மெஸெஞ்சர் சேவை இந்திய / இலங்கை நேரம் 4PM இலிருந்து நான்கு மணித்தியாலங்களுக்கு செயலிழந்ததாக தெரியவருகின்றது. இறுதியில் 8.25 PM அளவில் தான் அதன் சேவைகள் வழமைக்கு திரும்பியிருந்தன.

செயலிழப்பு நேரத்தில் அதிகமாக ஜிடாக்கை லாகின் செய்ய முடியாமல் அல்லது அரட்டையை செயற்படுத்தமுடியாமல் போனதாக அதன் பயனாளர்கள் முறையிட்டுள்ளனர்.

ஜிடாக் சேவையை நண்பர்களுடன் அரட்டைக்காக மட்டுமன்றி அலுவலங்களில் சக தொழிலாளர்களுடன் இலகுவாக இணைந்திருக்க பெருமளவில் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை டுவிட்டர் தளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது. டுவிட்டரின் உத்தியோகபூர்வ வலைப்பதிவில் "Users may be experiencing issues accessing Twitter. Our engineers are currently working to resolve the issue," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக