VS
பாகிஸ்தான் நாட்டு விமானப் படை ஆராய்ச்சி மையத்தில் ஆயுதங்கள் வடிவைப்புக்கு பதிலாக தற்போது ஐபேட் போன்ற புதிய டேப்லெட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
மற்ற நாடுகளுடன் போட்டி போடும் திறம் இருந்தாலும் பொருளாதார ரீதியாக சற்று பின்தகங்கிய நிலையில் இருக்கிறது பாகிஸ்தான். ஐபேட் போன்ற சிறந்த எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்குவதன் மூலம் பொருளாதாரத்தினை சற்று மேம்படுத்தலாம் என்று கருதி தனது கவனத்தை இந்த புதிய ஐபேட் தயாரிப்பில் திருப்பி உள்ளது.
பாகிஸ்தான் விமானப் படை ஆராய்ச்சி மையத்தில்தான் இந்த புதிய பாக்பேட்-1 ஐபேட் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பாக்பேடுக்கு ராணுவ கூட்டாளியான சீனா ஹார்டுவேர்களை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த புதிய டேப்லெட் கம்ப்யூட்டர் ஐபேட், குறைந்த விலை கொண்ட ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் டேப்லட்களைவிட இன்னும் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த ஐபேடின் ஹார்டுவேர்கள் எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்குவதில் திறம் படைத்த சீனா தயாரிப்பதால் நிச்சயம் மற்ற ஐபேட்களுக்கு இந்த பாக்பேட் ஐபேட் சிறந்த போட்டியை ஏற்படுத்தும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக