Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

புதிய ஓஸ் கொண்ட பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்

Written By Unknown on ஞாயிறு, 11 டிசம்பர், 2011 | 5:15 AM

புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் மொபைல் சாம்ராஜ்யத்தில் ஓர் புரட்சியையே ஏற்படுத்த இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். புதிய பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொடுக்க இருக்கிறது இந்நிறுவனம்.

இதற்கு முன்பு இந்த ஓஎஸ் பிபிஎக்ஸ் ஆப்பரேட்டிங் என்ற பெயர் கொண்டதாக வெளிவர இருந்தது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் முக்கிய விஷேசமே இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு அப்ளிகேஷன்கள் தயாரித்து வழங்குவோர் பிளாக்பெர்ரி நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதுதான். 

இந்த நிலையில், அதிக ஆவலைத் தூண்டியுள்ள இந்த புதிய பிளாக்பெர்ரி 10 ஓஎஸ்ஸுடன் அடுத்த ஆண்டு பிளாக்பெர்ரி மிலன் என்ற புதிய ஸ்மார்ட்மொபைலை பிளாக்பெர்ரி அறிமுகம் செய்ய உள்ளது.

ஆனால், மிலன் ஸ்மார்ட்போனுக்கு முன்னால் பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பிளாக்பெர்ரி லண்டன் என்ற புதிய ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதி கொண்ட ஸ்லைடர் ஸ்மார்ட்மொபைல். இதன் திரை நிச்சயம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்கும். பிளாக்பெர்ரி மிலன் ஸ்மார்ட்மொபைலில் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் அழகான புகைப்படத்தையும், வீடியோவினையும் பெற முடியும். மற்றொரு இனிப்பான செய்தியும் பிளாக்பெர்ரி நிறுவனத்திடமிருந்து வரும் என்று தெரிகிறது.

அடுத்த ஆண்டு இந்த புதிய பிளாக்பெர்ரி 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் 5 புதிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து, வெளியிட பிளாக்பெர்ரி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், பிளாக்பெர்ரி மிலன் ஸ்மார்ட்மொபைல் பற்றிய விலை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

0 comments:

கருத்துரையிடுக