Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

Written By Unknown on புதன், 22 பிப்ரவரி, 2012 | 4:43 PM



எச்பி நிறுவனம் சமீபத்தில் தனது HP15 நோட்புக் பிசியை புதுப்பித்து நவீன தொழில் நுட்பங்களுடன் களமிறக்கி இருக்கிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் சூப்பரான டிசைனைக் கொண்டிருக்கிறது. உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப் கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் வருகிறது.

எச்பியின் என்வி வரிசை லேப்டாப்புகளின் விலை ரூ.240,000லிருந்து ஆரம்பிக்கிறது. அதனால் இந்த புதிய லேப்டாப்பும் இதே விலையில் வரும் என்று தெரிகிறது.
இந்த HP 15 லேப்டாப் ரேடியன்ஸ் பேக்லிட் கீபோர்டுடன் வருகிறது. இந்த கீபோர்டு ப்ராக்சிமேட் சென்சாருடன் வேலை செய்யும் திறன் கொண்டது. மேலும் இந்த லேப்டாப் ஏராளமான அக்சஸரிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 6 சக்தி வாய்ந்த மல்டிமீடியா ஸ்பீக்கர்கள் மற்றும் 2 துணை ஊபர்கள் உண்டு. அதனால் இதில் பாடல் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.
மேலும் இந்த லேப்டாப் முற்றிலும் புதிய அலுமினியம் அனலாக் ஒலி டயல் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பீட்ஸ் ஆடியோ மேனேஜர் யூட்டிலிடியும் உள்ளதால் இதன் ஒலி அமைப்பை கூட்டுவதும் குறைப்பதும் மிக எளிதாக இருக்கும். அதோடு இந்த லேப்டாப் க்வட்கோர் சிபியு கொண்டுள்ளது. இதில் உயர்தர எஎம்டி மொபிலிட்டி ரேடியோன் எச்டி க்ராபிக் அக்ஸிலரேட்டர்களும் உண்டு.
இந்த லேப்டாப் 15,6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும். அதுபோல் பளிச்சென்று இருக்கும். இந்த லேப்டாப்புக்காக எச்பி சிறப்பான முறையில் ஒரு எச்பி வைபை டச் மவுஸ் எக்ஸ்7000 என்ற அக்சஸரியை உருவாக்கியிருக்கிறது.  இந்த நவீன மவுசின் விலை மட்டுமே ரூ.3,000 ஆகும்.

0 comments:

கருத்துரையிடுக